விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அரசு தேர்வுகள், முக்கியமான அலுவல் பணிகள் குறைவான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story