பாண்டிபஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி ஊழியரை தாக்கிய வியாபாரி கைது


பாண்டிபஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி ஊழியரை தாக்கிய வியாபாரி கைது
x

பாண்டிபஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி ஊழியரை தாக்கிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை பாண்டிபஜாரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஒரு வழிப்பாதை யாக மாற்றப்பட்டு நடைபாதைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடைபாதையில் கடைகளின் விளம்பர பலகைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த விளம்பர பலகைகளை அகற்றுமாறு கடைக்காரர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று அறிவுறுத்தினர். அப்போது அங்குள்ள வியாபாரி அப்துல்கரீம், மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர், கண்ணன் என்ற மாநகராட்சி ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரி அப்துல் கரீமை கைது செய்தனர்.


Next Story