மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னையில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னையில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
x

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இடையூறு இன்றி பணிகளை விரைவில் முடிப்பதற்காக அவ்வபோது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மீண்டும் சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டர்சன் சாலை, பில்கிங்டன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story