ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு


ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 30 Jan 2023 5:04 PM GMT (Updated: 30 Jan 2023 5:15 PM GMT)

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி கலெக்டராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி கலெக்டராக டி. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட கலெக்டராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக சி.பழனி நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக கே.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ஆர்.வி.ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்னர். கோவை மாவட்ட கலெக்டராக கிராந்தி குமார் பாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டராக சாரு ஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநராகவும், கோவை கலெக்டராக இருந்த சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட கலெக்ட மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்".

இவ்வாறு அதில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Next Story