சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி சாவு


சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி சாவு
x

மீஞ்சூரில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார்.

திருவள்ளூர்

மீஞ்சூர் லட்சுமிபுரம் தெருவில் வசிப்பவர் டேனியல் பாலகிருஷ்ணன் (வயது 85). இவர் மீஞ்சூர் ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி வெண்ணிலா (79). இவர் இதே பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென டேனியல் பாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார். மீஞ்சூர் அடுத்த மெரட்டூர் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மனைவி வெண்ணிலா மயங்கி விழுந்தார். அவரை மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெண்ணிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தம்பதி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story