ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே


ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே
x

அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

சென்னை,

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அந்தவயைில், சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகி விட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.

குறிப்பாக, பஸ் மற்றும் ரெயிலுக்கான டிக்கெட் எடுப்பது நேரடியாக பணம் செலுத்தி எடுக்கும் நிலை இருந்து வந்தது. ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதேபோல, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கும் டிக்கெட் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர வேண்டுமென ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில் பயணிகள் கோரிக்கை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்திய ரெயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து எடுத்துக்கொள்ள முடியும் என இந்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story