துணை ஜனாதிபதி தமிழகம் வருகை - தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை


துணை ஜனாதிபதி தமிழகம் வருகை - தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
x

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்துக்கு வர உள்ளார்.

சென்னை,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகத்துக்கு வர உள்ளார். இதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் ஆர்.லால்வேனா, பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், பொதுத்துறை அரசு துணை செயலாளர் எஸ்.அனு, பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை கமிஷனர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், ராணுவம், கப்பற்படை, போலீஸ் மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story