கனமழை காரணமாக விழுப்புரம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
மலட்டாற்றில் உள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் செல்வதால் பாலத்தை கடக்க நெடுஞ்சாலை துறையினர் தடை விதித்துள்ளனர்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மற்ற மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கனமழை காரணமாக விழுப்புரம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பில்லூர் - சேர்ந்தனூர் இடையே மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் செல்வதால் பாலத்தை கடக்க நெடுஞ்சாலை துறையினர் தடை விதித்துள்ளனர்.
மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் குச்சிபாளையம், அரசமங்கலம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் நிலவியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்படக் கூடிய இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.