விருதுநகர்: பட்டாசுகளை சட்டவிரோதமாக பதுக்கிய 100 பேர் கைது


விருதுநகர்: பட்டாசுகளை சட்டவிரோதமாக பதுக்கிய 100 பேர் கைது
x

உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை மறைத்து வைத்திருந்த 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Next Story