மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது - விவசாயிகள் அதிர்ச்சி


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது - விவசாயிகள் அதிர்ச்சி
x

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரத்து 978 கனயாக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரத்து 978 கனயாக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. தற்போது அணைக்கு 5 ஆயிரத்து 583 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அணையில் இருந்து நீர் பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 120 அடி கொண்ட அணையின் நீர்மட்டமானது, தற்போது 54.91 அடியாக உள்ளது.


Next Story