தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் - அன்புமணி ராமதாஸ்


தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 19 March 2024 8:47 AM IST (Updated: 19 March 2024 8:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை,

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளது. பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்" என்றார்.


Next Story