கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கோவை,

கோவை சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் இருந்து தென்மாவட்ட மக்களை காப்போம். கனமழை பெய்துவரும் தென்மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுவதுமாக குவிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். சென்னை பெருவெள்ளத்தில் பெற்ற அனுபவங்களை வைத்து தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்வோம்' என்றார்.


Next Story