வார விடுமுறை: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


வார விடுமுறை: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

வார விடுமுறையையொட்டி, இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னை,

வார விடுமுறையையொட்டி, தமிழகத்தில் இன்று முதல் 28-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் தலா 65 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றும், www.tnstc.in என்ற மொபைல் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story