மேடையில் எச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு


மேடையில் எச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர் ஹெச். ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி முழக்கமிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

எச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர் ஹெச். ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.


Next Story