அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சேலம்,
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,
மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் சென்னை வெள்ள பாதிப்புகளை திமுக அரசு பாடமாக எடுத்துக் கொள்ளாததால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது என கூறிய அவர் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதாக விமர்சித்தார்.
Related Tags :
Next Story