செல்போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றபோது - வாகனம் மோதி இளம்பெண் பலி


செல்போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றபோது - வாகனம் மோதி இளம்பெண் பலி
x

செல்போனில் பேசியபடி சாலையை கடந்து செல்ல முயன்ற இளம்பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையை சேர்ந்தவர் சையத் நிசார். இவருடைய மகள் ராயிஷா தில்தார்(வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 4 மாதங்களாக இவர், கொளத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி, அங்குள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாதவரம்-பாடி 200 அடி சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த ராயிஷா தில்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story