ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்


ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்
x

தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக செயல்படும் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் அ.தி.மு.க.வில் சேர பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு பேசுகிறார். அவர் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதன் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தன்னை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் இணைத்துக்கொள்வோம் என்று அறிவித்து இருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக மாறி வருகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இது வழக்கமான நடைமுறைதான் என்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் மனம் திருந்தி வர விரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என்றும், ஆனால் இந்த அறிவிப்பு தி.மு.க.வின் 'பி டீம்' ஆக செயல்படும் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் டெல்லி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார். தேசிய அளவில் பா.ஜ.க. தலைமையின் கீழ் செயல்படுவோம். தமிழகத்தை பொறுத்த அளவில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று உறுதியாக கூறிய ஜெயக்குமார், தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் தி.மு.க.வில் இருந்து பல கட்சிகள் வெளியேறுவது நிச்சயம் என்றும், மெகா கூட்டணியை தாங்கள் அமைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு சூடாகவும், விளக்கமாகவும் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.


Next Story