பட்டாசு ஆலை விபத்துகளால் உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி


பட்டாசு ஆலை விபத்துகளால் உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
x

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆலைகளின் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்து விபத்துகள் நேரிடாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கடலூர் அருகேயுள்ள எம்.புதூரில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளசெய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த அரசு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவது அவசியம்.

இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஆலைகளின் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதுடன், இனியும் விபத்துகள் நேரிடாமல் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.



Next Story