ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக போட்டியிடுமா.? இன்று ஆலோசனை


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக போட்டியிடுமா.? இன்று ஆலோசனை
x

இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளோடு இரண்டு கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

ஈரோடு,

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளோ, அதிமுக சார்பில் போட்டியிடுவதாக தனித்தனியே அறிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் பாமாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியோ, எங்கள் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் கமல்ஹாசனின் மநீம கட்சியும், விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. முன்னனி கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வரும் சூழலில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.


Next Story