பச்சிளங்குழந்தை கொலை: வாயால் சிக்கிய 3வது குற்றவாளி
அரக்கோணம் அருகே பச்சிளங்குழந்தை கொலை தொடர்பாக 3-வதாக ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியில் பச்சிளங்குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாத்தா ராமுவின் தங்கை தேன்மொழி, அவரது மகள் பாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தேன்மொழியை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த போலீசார் குழந்தையைக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டச் செய்து மீண்டும் அழைத்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த அவரது அண்ணன் மகள் அனு, தன் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட ஆத்திரத்தில் தன்னையும் மறந்து குழந்தையின் குடும்பத்திற்கு சாபமிட்டு மண்ணை வாரி இறைத்தார்.
இதைக் கவனித்த காவல்துறையினர், அனுவைப் பிடித்து விசாரித்ததில் கொலையில் அவருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர். பச்சிளங்குழந்தை கொலை விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story