மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

திருநின்றவூர் அருகே மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருநின்றவூர் அடுத்த நத்தமேடு கம்பர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 54) கூலித் தொழிலாளி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்ராஜை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தர்ராஜ் தனியாக வசித்து வந்தாா். மனவிரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் போலீசார் சுந்தரராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story