காரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
காஞ்சிபுரம் அருகே காரில் லிப்ட் கொடுப்பது போலி நடித்து பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குண்ணவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 39 வயது பெண். இவர் இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் காரை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறி காரில் அழைத்து சென்றார். அப்போது அவரிடம் இருந்த 4 கிராம் தங்க கம்மளை பறித்து சென்றார். இது குறித்து ஒரகடம் போலீஸ் நிலையத்தில் சரிதா புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி வள்ளலார் நகரை சேர்ந்த சதாம் உசேன் (29) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் மேலும் இதைபோல் மற்றொரு பெண்ணிடம் மோதிரம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். பின்பு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.