தி.மு.க.வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்


தி.மு.க.வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
x

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இளைஞர்கள் சாரை சாரையாக கட்சியில் இணைந்து வருகின்றனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



சென்னை,


நடிகர் மற்றும் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு அதிகாலை முதலே பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் பேசிய தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தி.மு.க.வுக்கு 19, 20 துணை அமைப்புகள் இருந்தபோதும், தி.மு.க. இளைஞரணி மிக பெரிய அளவில் 30 லட்சம் இளைஞர்களை கொண்டு உயிரோட்டத்துடன் உள்ளது.

இந்த பொறுப்பை 2-வது முறையாக ஏற்று உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி கொண்டிருக்கிறார். அவர் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களிடம் ஒரு பெரிய உத்வேகம், புதிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது.

அதனால், தி.மு.க.வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார்.


1 More update

Next Story