'யூடியூப்' மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி


யூடியூப் மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
x

கோவில் பெயரை பயன்படுத்தி ‘யூடியூப்’ மூலம் பணம் வசூலித்து மோசடி செய்து கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை பூந்தமல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான கோவிலையும், சிலைகளையும் புனரமைப்பதாக கூறி 'யூ டியூப்' மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.44 லட்சத்துக்கும் மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (வயது 33) என்பவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கைதான கார்த்திக் கோபிநாத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்திருந்தனர். நேற்று அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின், கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தார். முன்னதாக கார்த்திக் கோபிநாத்தை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பா.ஜ.க.வினரும் அதிகளவில் குவிந்து இருந்ததால் கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் கார்த்திக் கோபிநாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story