சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17.19 லட்சம் பறிமுதல்
சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழு என 3 குழுக்கள் 3 ஷிப்டுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பெருமாள்பட்டி என்ற இடத்தில் வாகனசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.17.19 லட்சத்தை வட்டாச்சியர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story