தேர்தல் பணிகள்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தேர்தல் வியூகம் குறித்து தலைமை கழகத்தில் இன்று ஓ பன்னீர் செல்வமும் - எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து விரைவில் முடிக்க உள்ளது.
இதற்காக தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையை ஓரிரு நாளில் முடிக்க அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் வியூகம் குறித்து தலைமை கழகத்தில் இன்று ஓ பன்னீர் செல்வமும் - எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை மேற்கொண்டனர். எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று விரிவாக விவாதித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இருவரது தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளதால் அந்த பட்டியல் தலைமை கழகத்தில் இருந்து விரைவில் வெளியாகும் என நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






