நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் திருவொற்றியூரில் சீமான் போட்டி


நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் திருவொற்றியூரில் சீமான் போட்டி
x
தினத்தந்தி 8 March 2021 5:31 AM IST (Updated: 8 March 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். திருவொற்றியூரில் சீமான் களம் காண்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து எதிர்கொள்கிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என 234 வேட்பாளர்களையும் சீமான் மேடையில் அறிமுகப்படுத்தினார். அவர்கள் எதிர், எதிர் வரிசையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். வேட்பாளர்களை ஒவ்வொருவராக சீமான் அறிமுகப்படுத்தி பேசினார். திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் காண்பேன் என்று அறிவித்திருந்த சீமான் தற்போது திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பெரம்பூர்-எழும்பூர்

1.கும்மிடிப்பூண்டி-உஷா, 2.பொன்னேரி (தனி) -மகேஷ்வரி, 3.திருத்தணி-லி.அகிலா, 4.திருவள்ளூர்-பெ.பசுபதி, 5.பூந்தமல்லி (தனி) -வி.மணிமேகலை, 6.ஆவடி-கோ.விஜயலட்சுமி, 7.மதுரவாயல்-கோ-கணேஷ்குமார், 8.அம்பத்தூர்-ரா.அன்பு தென்னரசன், 9.மாதவரம்-ரா.ஏழுமலை, 10.திருவொற்றியூர்-சீமான். 11.ராதாகிருஷ்ணன் நகர்-கவுரிசங்கர், 12. பெரம்பூர்-செ.மெர்லின் சுகந்தி, 13.கொளத்தூர்-பெ.கெமில்ஸ் செல்வா, 14. வில்லிவாக்கம்-

ஸ்ரீதர், 15. திரு.வி.க. நகர் (தனி) - இரா. இளவஞ்சி, 16.எழும்பூர் (தனி) -பூ.கீதாலட்சுமி, 17.ராயபுரம்-சு.கமலி, 18. துறைமுகம்-முகம்மது சுதாபி, 19- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி-மு.ஜெயசிம்மராஜா, 20. ஆயிரம் விளக்கு-அ.ஜெ.ஷெரின், 21. அண்ணா நகர்-சி.சங்கர், 22- விருகம்பாக்கம்- த.சா.ராஜேந்திரன், 23. சைதாப்பேட்டை-பா.சுரேஷ்குமார், 24. தியாகராய நகர்-பா.சிவசங்கரி, 25.மயிலாப்பூர்-.மகாலட்சுமி, 26. வேளச்சேரி-மோ.கீர்த்தனா, 27. சோழிங்கநல்லூர்-ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர், 28. ஆலந்தூர்-கார்த்திகேயன், 29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - த.புஷ்பராஜ், 30. பல்லாவரம்-மினிஸ்ரீ, 31.தாம்பரம்-த.சுரேஷ் குமார், 32. செங்கல்பட்டு-கி.சஞ்சீவிநாதன்.

குடியாத்தம்-வேலூர்

33.திருப்போரூர்-ச.மோகனசுந்தரி, 34. செய்யூர் (தனி) -இரா.இராஜேஷ், 35. மதுராந்தகம் (தனி) -வெ.சுமிதா, 36. உத்திரமேரூர்-காமாட்சி, 37. காஞ்சீபுரம்-சா.சால்டின், 38.அரக்கோணம் (தனி) -எ.அபிராமி, 39. சோளிங்கர்- யு.ரா.பாவேந்தன், 40. காட்பாடி- திருக்குமரன், 41.-ராணிப்பேட்டை-வெ.சைலஜா, 42.ஆற்காடு-இரா.கதிரவன், 43. வேலூர்-நா.பூங்குன்றன், 44. அணைக்கட்டு-அ.சுமித்ரா, 45.கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) - ஜெ.திவ்யராணி, 46. குடியாத்தம் (தனி) -இரா. கலையேந்திரி, 47.வாணியம்பாடி- சா.தேவேந்திரன்.

48.ஆம்பூர்-மா.மெகருனிஷ், 49. ஜோலார்பேட்டை-ஆ.சிவா, 50. திருப்பத்தூர்-மா.சுமதி, 51.ஊத்தாங்கரை (தனி) -த.இளங்கோவன், 52.பர்கூர்-கருணாகரன், 53.கிருஷ்ணகிரி-நிரந்தரி, 54.வேப்பனஹள்ளி-சக்திவேல், 55.ஓசூர்-கீதாலட்சுமி, 56.தளி-மேரி செல்வராணி, 57.பாலகோடு-கலைச்செல்வி, 58.பென்னாகரம்-தமிழழகன், 59.தர்மபுரி-செந்தில்குமார், 60-பாப்பிரெட்டிபட்டி-ரமேஷ், 61.அரூர் (தனி) -கீர்த்தனா, 62.செங்கம் (தனி) -வெண்ணிலா, 63.திருவண்ணாமலை-கமலக்கண்ணன், 64-கீழ்பெண்ணாத்தூர்-ரமேஷ்பாபு, 65-கலசபாக்கம்-பாலாஜி, 66.போளூர் -லாவண்யா.

கள்ளக்குறிச்சி

67.ஆரணி-பிரகலதா, 68.செய்யாறு-பீமன், 69.வந்தவாசி (தனி) -பிரபாவதி, 70.செஞ்சி-சுகுமார், 71.மயிலம்-உமா மகேஷ்வரி, 72.திண்டிவனம் (தனி) -பேச்சிமுத்து, 73.வானூர் (தனி) -லட்சுமி, 74.விழுப்புரம்-செல்வம், 75.விக்கிரவாண்டி-ஷீபா ஆஸ்மி, 76.திருக்கோவிலூர்-முருகன், 77.உளூந்தூர்பேட்டை-புஷ்பமேரி, 78.ரிஷிவந்தியம்-சுரேஷ் மணிவண்ணன், 79.சங்கராபுரம்-ரஜியாமா, 80.கள்ளக்குறிச்சி (தனி) -திராவிட முத்தமிழ் செல்வி, 81.கெங்கவள்ளி (தனி) -வினோதினி, 82.ஆத்தூர்-சேலம் (தனி) -கிருஷ்ணவேணி, 83.ஏற்காடு (தனி) -ஜோதி, 84.ஓமலூர்-ராசா, 85.மேட்டூர்-மணிகண்டன், 86.எடப்பாடி-ஸ்ரீரத்னா, 87.சங்கிரி-அனிதா, 88.சேலம் மேற்கு-நாகம்மாள், 89.சேலம் வடக்கு-இமய ஈஸ்வரன், 90.சேலம் தெற்கு-மாரியம்மாள்.

91.வீரபாண்டி-ராஜேஷ்குமார், 92.ராசிபுரம் (தனி) -சிலம்ரசி, 93.சேந்தமங்களம் (தனி) -ரோகிணி, 94.நாமக்கல்-பாஸ்கர், 95.பரமத்தி-வேலூர்-யுவராணி, 96.திருச்செங்கோடு-நடராசன், 97.குமாரபாளையம்-வருண், 98.ஈரோடு கிழக்கு-கோமதி, 99.ஈரோடு மேற்கு-சந்திரகுமார். 100.மொடக்குறிச்சி-லோகுபிரகாஷ், 101.பெருந்துறை-லோகநாதன், 102-பவானி-சத்யா, 103.அந்தியூர்-சரவணன், 104 கோபிசெட்டி பாளையம்-சீத்தாலட்சுமி.

கோவை

105. பவானிசாகர் (தனி) -சங்கீதா, 106.தாராபுரம் (தனி) -ரஞ்சிதா, 107.காங்கேயம்-சிவானந்தம், 108.அவினாசி (தனி) - ஷோபா, 109.திருப்பூர் வடக்கு-ஈஸ்வரன், 110.திருப்பூர் தெற்கு-சண்முகசுந்தரம், 111.பல்லடம்-சுப்பிரமணியன், 112.உடுமலைபேட்டை-பாபு என்கிற பாரி பைந்தமிழன், 113.மடத்துக்குளம்-சனுஜா, 114.உதகமண்டலம்-ஜெயக்குமார், 115.கூடலூர் (தனி) -கேதீஸ்வரன், 116.குன்னூர்-லாவண்யா, 117.மேட்டுபாளையம்-யாஸ்மின், 118-சூலூர்-இளங்கோவன், 119.கவுண்டம்பாளையம்-கலாமணி, 120.கோவை வடக்கு-பாலேந்திரன், 121.தொண்டாமுத்தூர்-கலையரசி, 122.கோவை தெற்கு-அப்துல்வகாப், 123.சிங்காநல்லூர்-நர்மதா, 124.கிணத்துகடவு-உமா ஜெகதீஸ், 125.பொள்ளாச்சி-லோகேஸ்வரி, 126.வால்பாறை (தனி) -கோகிலா, 127.பழனி-வினோத் ராஜசேகரன், 128.ஒட்டன்சத்திரம்-சக்திதேவி, 129.ஆத்தூர்-திண்டுக்கல்-சைமன் ஜஸ்டின், 130.நிலக்கோட்டை (தனி) -வசந்தாதேவி, 131.நத்தம்-சிவசங்கரன், 132.திண்டுக்கல்-ஜெயசுந்தர், 133.வேடசந்தூர்-போதுமணி.

புவனகிரி

134.அரவக்குறிச்சி-அனிஷா பர்வீன், 135.கரூர்-கருப்பையா, 136.கிருஷ்ணராயபுரம் (தனி) -இலக்கியா, 137.குளித்தலை-பிரகாஷ், 138.மணப்பாறை-கனிமொழி, 139.ஸ்ரீரங்கம்-செல்வரதி, 140.திருச்சி மேற்கு-வினோத், 141.திருச்சி கிழக்கு-பிரபு, 142.திருவெறும்பூர்-சோழசூரன், 143.லால்குடி-மலர் தமிழ்பிரபா, 144.மண்ணச்சநல்லூர்-கிருஷ்ணசாமி, 145.முசிறி-ஸ்ரீதேவி, 146.துறையூர் (தனி) -தமிழ்செல்வி, 147.பெரம்பலூர் (தனி) -மகேஷ்வரி, 148.குன்னம்-அருள், 149.அரியலூர்-சுகுணா, 150.ஜெயங்கொண்டாம்-மகாலிங்கம்.

151.திட்டக்குடி (தனி) -காமாட்சி, 152.விருத்தாச்சலம்-அமுதா, 153.நெய்வேலி-ரமேஷ், 154.பண்ருட்டி-சுபாஷினி, 155.கடலூர்-கடல் தீபன், 156.குறிஞ்சிபாடி-சுமதி, 157.புவனகிரி-ரத்னவேல், 158.சிதம்பரம்-நடராஜன், 159.காட்டுமன்னார் கோவில் (தனி) -நிவேதா, 160.சீர்காழி (தனி) -கவிதா, 161.மயிலாடுதுறை-காசிராமன், 162.பூம்புகார்-காளியம்மாள், 163.நாகப்பட்டினம்-அகஸ்டின் அற்புதராஜ், 164.கீழ்வேளூர்-பொன் இளவழகி, 165.வேதாரண்யம்-ராஜேந்திரன், 166.திருத்துறைப்பூண்டி-ஆர்த்தி, 167.மன்னார்குடி-அரவிந்தன், 168.திருவாரூர்-வினோதினி, 169.நன்னிலம்-பாத்திமா பர்கானா, 170.திருவிடைமருதூர்-திவ்யபாரதி, 171.கும்பகோணம்-ஆனந்த், 172.பாபநாசம்-கிருஷ்ணகுமார்.

மதுரை

173.திருவையாறு- செந்தில்நாதன், 174.தஞ்சாவூர்-சுபாதேவி, 175.ஓரத்தநாடு-கந்தசாமி, 176.பட்டுக்கோட்டை-கீர்த்திகா, 177.பேராவூரணி-திலீபன், 178.கந்தர்வகோட்டை-ரமீளா, 179.விராலிமலை-அழகுமீனா, 180.புதுக்கோட்டை-சசிக்குமார், 181.திருமயம்-சிவராமன், 182.ஆலங்குடி-திருச்செல்வம், 183.அறந்தாங்கி-ஹூமாயுன்கபீர், 184.காரைக்குடி-துரைமாணிக்கம், 185.திருப்பத்தூர் சிவகங்கை-கோட்டை குமார், 186.சிவகங்கை-மல்லிகா, 187.மானாமதுரை-சண்முகபிரியா, 188.மேலூர்-கருப்பசாமி, 189.மதுரை கிழக்கு-லதா, 190.சோழவந்தான்-செங்கண்ணன்.

191.மதுரை வடக்கு-அன்பரசி, 192.மதுரை தெற்கு-அப்பாஸ், 193.மதுரை மத்தி-பாண்டியம்மாள், 194.மதுரை மேற்கு-வெற்றிகுமரன், 195.திருப்பரங்குன்றம்-ரேவதி, 196.திருமங்கலம்-சாராள், 197.உசிலம்பட்டி-ஐந்துகோவிலான், 198.ஆண்டிபட்டி-ஜெயக்குமார், 199.பெரியக்குளம்-விமலா, 200-போடிநாயக்கணூர்-பிரேம்சந்தர்.

தென்காசி

201.கம்பம்-அனீஸ் பாத்திமா, 202.ராஜபாளையம்-ஜெயராஜ், 203.ஸ்ரீவல்லிபுத்தூர்-அபிநயா, 204.சாத்தூர்-பாண்டி, 205.சிவகாசி-கனகபிரியா, 206-விருதுநகர்-செல்வகுமார், 207.அருப்புக்கோட்டை-உமா, 208.திருச்சுழி-ஆனந்த ஜோதி, 209.பரமக்குடி-சசிகலா, 210.திருவாடானை-ஜவகர், 211.ராமநாதபுரம்-இளங்கோவன், 21.முதுகுளத்தூர்-ரகுமத்நிஷா, 213.விளாத்திக்குளம்-பாலாஜி, 214..தூத்துக்குடி-வேல்ராஜ்.

215.திருச்செந்தூர்-குளோரியான், 216.ஸ்ரீவைகுண்டம்-சுப்பையாபாண்டியன், 217.ஓட்டபிடாராம்-சுப்புலட்சுமி, 218.கோவில்பட்டி-கோமதி, 219.சங்கரன்கோவில்-மகேந்திரகுமாரி, 220.வாசுதேவநல்லூர்-மதிவாணன், 221.கடையநல்லூர்-முத்துலட்சுமி, 222.தென்காசி-வின்சென்ட் ராஜ், 223.ஆலங்குளம்-சங்கீதா, 224.நெல்லை-சத்யா, 225.அம்பாசமுத்திரம்-செண்பகவள்ளி, 226.பாளையங்கோட்டை-பாத்திமா, 227.நாங்குநேரி-வீரபாண்டி, 228.ராதாபுரம்-ஜேசுதாசன், 229.கன்னியாகுமரி-சசிகலா, 230.நாகர்கோவில்-விஜயராகவன், 231.குளச்சல்-ஆன்றணி-ஆஸ்லின், 232.பத்மநாபபுரம்-சலீன் என்ற சீலன், 233.விளவங்கோடு-மேரி ஆட்லின், 234.கிள்ளியூர்-பீட்டர் ஹாரீஸ்.

Next Story