திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்தது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது. அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் திமுகவின் இந்த அறிவிப்புகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்ததக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என்ற பெயரில் மு.க,ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அறிவிப்பு எல்லாம் ஒரு ஏமாற்று வேலை. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார். ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்தது” என்று எல்.முருகன் கூறினார்.
Related Tags :
Next Story