எங்கள் திட்டங்களை திமுக காப்பி அடித்து வெளியிட்டுள்ளது - திமுக மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு
தங்கள் திட்டங்களை காப்பி அடித்து வெளியிட்டுள்ளதாக திமுக மீது கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
இதனிடையே திமுகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தங்கள் திட்டங்களை காப்பி அடித்து வெளியிட்டுள்ளதாக திமுக மீது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் இல்லத்தரசிகளுக்கான நடவடிக்கைகளுடன் 'தமிழ்நாட்டை மறுசீரமைத்தல்' பற்று கூறினோம். இந்த பார்வை இதற்கு முன்னரே தொடங்கப்பட்டது என்பதற்கு அவர்களிடம் (திமுக) ஆதாரம் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு சொல்லுங்கள். அந்த திட்டம் எங்களிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை
இதனை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் மேலும் காப்பி அடிக்க விரும்பினால், பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் எங்களிடம் உள்ளன. தனி மனித விமர்சனத்தில் திமுக ஈடுபடுகிறது. புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், ஒட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறினார்.
Related Tags :
Next Story