புதுச்சேரி திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு


புதுச்சேரி திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 11 March 2021 4:07 PM IST (Updated: 11 March 2021 4:07 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அங்குள்ள 30 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு செய்வது குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இறுதியாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தரப்பில் ஜகதரட்சகன் எம்.பி., புதுச்சேரி தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 

இன்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரியில் திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு(இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க.) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் பேசி இறுதி செய்ததாககவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story