ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை 17-ந்தேதி வெளியீடு
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை 17-ந்தேதி (நாளை மறுதினம்) வெளியிடப்படுகிறது. 18-ந்தேதி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்கிறார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோவும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
பிரசார பொதுக்கூட்டம்
இதுகுறித்து ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் 17-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பொதுசெயலாளர் வைகோ வெளியிடுகிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு கேட்டு தனது பிரசார பயணத்தை 18-ந்தேதி (வியாழக்கிழமை) வைகோ தொடங்குகிறார்.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில், கொளத்தூர் தொகுதி வேட்பாளரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆதரித்து வைகோ தேர்தல் பிரசார கூட்டத்தில் சிறப்புரை ஆற்றி பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story