துருக்கியில் உக்ரைன்-ரஷியா இன்று பேச்சுவார்த்தை..!!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 27 March 2022 7:30 PM GMT (Updated: 27 March 2022 7:30 PM GMT)

துருக்கியில் உக்ரைன்-ரஷியா இடையே இன்று அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கீவ், 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்தப் பேச்சு வார்த்தை முடிகிறது.

இந்த தகவலை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை நடந்துள்ள பேச்சு வார்த்தைகள் மிகவும் கடினமானவை என உக்ரைன் விமர்சித்தது. இந்த நிலையில் இன்று துருக்கியில் தொடங்குகிற பேச்சுவார்த்தையிலாவது திருப்பம் வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Next Story