பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் பலி..!

பாகிஸ்தானில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா மாவட்டத்தில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து வாகனத்தில் ஏற்பட்ட தீயில் கருகி இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உள்ளூரைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாகனத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மொரோ நகரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சிந்து நகரில் உள்ள டாண்டோ முகமது கான் சாலையில் டிரக் மற்றும் பயணிகள் வேன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story