உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்: ரஷிய வெளியுறவு அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2022 12:08 PM GMT (Updated: 6 May 2022 12:08 PM GMT)

உக்ரைனில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. தற்போது  72-வது நாளாக நீடித்து வரும் இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில்,உக்ரைன் மீது ரஷியா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், அதற்கான பயிற்சியில் ரஷியா ஈடுபடுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. ஒரு வேளை ரஷியா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்  மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜைட்சேவ் தெரிவித்தார். ரஷியா உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைக்கு இது பொருந்தாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story