சீனாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 25 பேர் உயிரிழப்பு


சீனாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 25 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jan 2024 5:55 PM IST (Updated: 25 Jan 2024 12:32 AM IST)
t-max-icont-min-icon

மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பீஜிங்:

சீனாவின் ஜியாங்சி மாகாணம், யுஷூயி மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். எனினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story