அமெரிக்காவில் ஆற்றில் தவறி விழுந்த 80 வயது முதியவரை கண்டுபிடித்த போலீஸ் நாய்


அமெரிக்காவில் ஆற்றில் தவறி விழுந்த 80 வயது முதியவரை கண்டுபிடித்த போலீஸ் நாய்
x

காட்டில் தொலைந்து போன முதியவரை கண்டுபிடித்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 80 வயதான முதியவர் ஒருவர் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளார். மேலும் காட்டுப் பகுதியில் அவர் தொலைந்து போனதற்கு அடையாளமாக 3 முறை துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை அந்த முதியவரின் மனைவி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரை தேடும் பணியில் கே9-லோகி என்ற போலீஸ் நாய் களமிறக்கப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆசேபில் என்ற ஆற்றின் கரையோரமாக முதியவரை அந்த போலீஸ் நாய் கண்டுபிடித்தது.

இதையடுத்து அந்த முதியவர் காப்பாற்றப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதகாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டில் தொலைந்து போன முதியவரை கண்டுபிடித்த நாய்க்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1 More update

Next Story