உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு


உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு
x

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் தொடர்ந்து ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story