நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் கடும் பீதி


நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் கடும் பீதி
x

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

காத்மாண்டு,

நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் இடுபாடிகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் நேபாளத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு மாவட்டமான பாஜுராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:13 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.


Next Story