ஆப்கானிஸ்தானில் ஆயுத கிடங்குகளை கைப்பற்றிய ராணுவம் - 4 பயங்கரவாதிகள் கைது


ஆப்கானிஸ்தானில் ஆயுத கிடங்குகளை கைப்பற்றிய ராணுவம் - 4 பயங்கரவாதிகள் கைது
x

ஆப்கானிஸ்தானில் ஆயுத கிடங்குகளை ராணுவம் கைப்பற்றியநிலையில், 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பயங்கரவாத செயல்கள் வெகுவாக அதிகரித்தது. எனவே அவர்களை ஒழிப்பதற்காக தலீபான் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பர்வான் மாகாணத்தில் ஆயுத கிடங்கு ஒன்றை ராணுவ வீரர்கள் கண்டு பிடித்தனர். அங்கு துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் போன்றவை இருந்தன. அவற்றை கைப்பற்றிய ராணுவத்தினர் 4 பயங்கரவாதிகளையும் கைது செய்தனர். இதேபோல் கஜினி மற்றும் உருஸ்கான் ஆகிய மாகாணங்களிலும் பல்வேறு ஆயுத கிடங்குகளை கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Next Story