பாகிஸ்தானில் பனிச்சரிவு - நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் பனிச்சரிவு - நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு
x

ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சம்பெலி பகுதியில் உள்ள ஷவுண்டர் மலைப்பாதை ஆசாத் காஷ்மீர் எல்லைப்பகுதியையும், கில்ஜித் பகுதியின் அஸ்டோர் மாவட்டத்தையும் இணைக்கிறது. இந்த பாதையை நாடோடி பழங்குடி இன மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


1 More update

Next Story