விண்வெளி போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லை; அமெரிக்கா மீது சீனா சாடல்


விண்வெளி போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லை; அமெரிக்கா மீது சீனா சாடல்
x

விண்வெளி போட்டியில் பங்கேற்க சீனா விரும்பவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

விண்வெளியை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் போட்டி போட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் மனிதர்களை அனுப்பி வருகின்றன. மேலும் அங்கு மனிதர்கள் தங்கி ஆய்வு செய்யும் வகையில் அமெரிக்காவும், சீனாவும் விண்வெளி நிலையங்களை அமைத்துள்ளன. இந்த நிலையில் நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா தற்போது அனுப்பி உள்ளது. இதன்மூலம் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) நிலவின் தென்துருவத்தில் முதன்முறையாக மனிதர்கள் தரையிறங்க உள்ளனர். ஆனால் விண்வெளி போட்டியில் தற்போது அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே திறன் கொண்டுள்ளன. எனவே ரஷியாவால் விண்வெளியில் மனிதர்களை தரையிறக்க முடியாது என நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

இதற்கு பதிலடியாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எந்த ஒரு நாட்டுடனும் விண்வெளி போட்டியில் பங்கேற்க சீனா விரும்பவில்லை. எனவே தங்களது யூகத்தை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முழு உலகத்தின் நலன்களையும் பாதுகாக்க முயல்வதாக கூறும் அமெரிக்கா தனது தனிப்பட்ட நலனுக்காக விண்வெளி வளங்களை சுரண்டுகிறது' என கடுமையாக சாடி உள்ளது.


Next Story