"அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை" - சீனா அறிவிப்பு


அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை - சீனா அறிவிப்பு
x

அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை இனி பதிவு செய்யப்போவது இல்லை என சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

இதன் பலனாக தற்போது அங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தி கொரோனா பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க சீன சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் இதற்கு சீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால், மருத்துவமனைகளில் அவற்றை முறையாக பதிவு செய்வதில் சிக்கல் எழுந்த்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவில் இனி அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யப்போவது இல்லை என சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பெரிய அளவில் கொரோனா சோதனைகளை நடத்த வேண்டி இருப்பதாலும், பாதிப்பு எண்ணிக்கையை பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story