சீனா சமீபத்தில் ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்பு..!


சீனா சமீபத்தில் ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்பு..!
x

image tweeted by @chinaEUMission

சீனா சமீபத்தில் ஏவிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய்,

சீனா சமீபத்தில் லாங் மார்ச் 5பி ராக்கெட்டை வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பெய்ஜிங் உள்ளூர் நேரப்படி) சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.

இந்த நிலையில், ஹைனான் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் சிதைவுகள் பூமியின் ஏதாவது ஒரு இடத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்வீக் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தும்போது, ராக்கெட்டின் முதல் பாகம் அதன் எரிபொருளை முழுவதுமாக எரித்துவிட்டால், ராக்கெட்டின் கூடுதல் எடையைக் குறைக்க வெற்றுப் பகுதி அதில் இருந்து பிரிக்கப்படும். அந்த ராக்கெட் பாகம் பூமியை நோக்கி வரும்போது வளிமண்டலத்தில் எரிந்துவிடும்.

ஆனால், லாங் மார்ச் 5 பி ராக்கெட், மிகப்பெரியது ஆகும். இது 176 அடி உயரம் மற்றும் 1.8 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளதாக உள்ளது என்று நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல் ஒரு டுவீட்டில் கூறும்போது, "சீனாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டின் பூஸ்டர் வளிமண்டலத்தில் சுற்றுப்பாதையில் உள்ளது என்றும், முழுவதுமாக எரியாத நிலையில், பூமியில் எங்கேயாவது விழலாம் என்றும் அவர் கூறினார்.


Next Story