'எனது ஏலியன் நண்பர்கள் நிற்கிறார்கள்' - அமெரிக்க வான் பரப்பில் மர்ம பொருட்கள் குறித்து எலான் மஸ்க் டுவிட்


எனது ஏலியன் நண்பர்கள் நிற்கிறார்கள் - அமெரிக்க வான் பரப்பில் மர்ம பொருட்கள் குறித்து எலான் மஸ்க் டுவிட்
x

டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்கள், மர்ம பொருட்கள் பறந்து வருகிறது. இந்த மர்ம பொருட்களை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த சீன உளவு பலூனை கடந்த 4-ம் தேதி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அந்த பலூன் வானிலை குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதாக சீனா தெரிவித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்கா மாகாண வான் எல்லைக்குள் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை அமெரிக்க-கனடா வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்த மர்ம பொருள் கனடாவின் யுகோன் மாகாணத்திற்கு அருகே அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த 3 சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வான்பரப்பில் மர்ம பலூன்கள்/பொருட்கள் பறந்து வருவதும் அதை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை எலியன்களுடன் தொடர்புபடுத்தி டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் நகைச்சுவையாக டுவிட் செய்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கவலைபடாதீர்கள், எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story