உக்ரைனும், ரஷியாவும் ஒருவரையொருவர் மன்னிக்க எலான் மஸ்க் வலியுறுத்தல்


உக்ரைனும், ரஷியாவும் ஒருவரையொருவர் மன்னிக்க எலான் மஸ்க் வலியுறுத்தல்
x

உக்ரைனும், ரஷியாவும் போர் குறித்த விஷயத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற மத கோட்பாட்டின்படி ஒருவரையொருவர் மன்னித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

உலக பணக்காரரும், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பதுண்டு. அந்தவகையில், 2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியுடன் எக்ஸ் (டுவிட்டர்) செயலியில் காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என உக்ரைன் போர் குறித்த தனது கருத்தை ராமசாமி தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கையில் `உக்ரைனும், ரஷியாவும் இந்த விஷயத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற மத கோட்பாட்டின்படி ஒருவரையொருவர் மன்னித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என எலான் மஸ்க் தெரிவித்தார்.


Next Story