"உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது" - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்


உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
x

ஐ.நா.வின் சாசனம் மற்றும் கொள்கைகளில் இந்தியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

இந்தியாவின் 77-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இடையிலான உறவு குறித்த சிறப்பு கருத்தரங்கு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

"2047-ம் ஆண்டில் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று கருதுகிறோம். இந்தியாவின் சொந்த வளர்ச்சியானது உலகின் மற்ற நாடுகளுடன் இருந்து பிரிக்க முடியாதது என்பது எங்கள் அடிப்படை நம்பிக்கை.

தொலைதூர கிராமங்களை டிஜிட்டல் மயமாக்கி நிலவில் இறங்க வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஒருவேளை நிலவையும் கூட டிஜிட்டல் மயமாக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள், அதன் சாசனம் மற்றும் கொள்கைகளில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு, நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. சமீப ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், மியான்மர், இலங்கை, ஏமன் மற்றும் பல நாடுகளுக்கு மானிய உதவி உட்பட உணவு தானியங்களை வழங்குவதன் மூலம் இந்தியா இந்த சூழலை சமாளிப்பதற்கு பங்காற்றி வருகிறது."

இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story