காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டு மக்கள்


காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டு மக்கள்
x

சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

காசா முனை,

இஸ்ரேலுக்குள் கடந்த 7-ந் தேதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பினர், வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஹமாஸ் படை பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில்,

வரும் நாட்களில் பல வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். காசாவில் தரைவழி தாக்குதலின்போது இஸ்ரேல் ராணுவத்துடன் மூன்று நிலைகளில் ஹமாஸ் படையினர் மோதலில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் 22 ராணுவ வாகனங்களை அழித்திருக்கிறோம். ஆசிப் என்ற ஏவுகணையை பயன்படுத்தி எங்கள் கடற்படை பதிலடி கொடுத்துள்ளது என்றார்.

இந்தநிலையில், வெளிநாட்டு பிணைக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் அறிவித்ததை தொடர்ந்து, பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டு மக்கள், எகிப்து நாட்டிற்கு ரபா வழியாக கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூண்டதில் இருந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரபா எல்லையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


Next Story