சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பாதுகாப்புப்படையினர் 4 பேர் பலி


சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பாதுகாப்புப்படையினர் 4 பேர் பலி
x

Image Courtesy: AFP (File Photo)

தினத்தந்தி 7 Aug 2023 9:33 AM GMT (Updated: 7 Aug 2023 10:49 AM GMT)

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ்,

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. சிரிய அதிபர் பஷீர் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப்போரில் அதிபர் அசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், ஈரான் ஆதரவு குழுவினர் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் சிரியா-இஸ்ரேல் எல்லையோரம் இருந்தவாறு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை தடுக்க சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிரியா பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story