வீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு


வீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு
x

கோப்புப்படம்

இம்ரான் கான் - புஷ்ரா பீவிக்கு சொந்தமான வீட்டை கிளைச்சிறையாக மாற்றபோவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதாகி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகளில் அவருடைய மனைவி புஷ்கர் பீவிக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய விதிமுறைக்கு எதிரான நடைமுறையில் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்ட வழக்கில் புஷ்கர் பீவிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் புஷ்ரா பீவி அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் இம்ரான் கான் - புஷ்ரா பீவிக்கு சொந்தமான அவர்களுடைய வீட்டை கிளைச்சிறையாக மாற்றபோவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது.

இதனை எதிர்த்து புஷ்ரா பீவி இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைபோல் தானும் அடியாலா சிறையிலேயே தன்னுடைய சிறை தண்டனையை அனுபவிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் தன் வீட்டை கிளைச்சிறையாக மாற்றும் முடிவுக்கு கோர்ட்டு தடை விதிக்க வேண்டும் என்றுள்ளார்.

மேலும் வீட்டின் வளாகத்தை சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வருவதாகவும் இதனால் பாதுகாப்பற்ற நிலையை தான் உணருவதாகவும் புஷ்ரா பீவி தெரிவித்துள்ளார்.


Next Story