பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு


பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு
x

பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. சமீபத்தில், டுவிட்டர் 'லோகோ'வான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' என்ற நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத டுவீட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து டுவீட்டரில் அவர் பதிவிட்டு உள்ளார்.


Next Story